குமரி மாவட்டகூட்டுறவு வங்கிகளில்  நகை கடனில் முறைகேடு 

by Editor / 23-09-2021 06:47:24pm
குமரி மாவட்டகூட்டுறவு வங்கிகளில்  நகை கடனில் முறைகேடு 

 


குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.
 குமரி மாவட்டத்தில் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ. 1.47 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ. 1.25 கோடி கடன் பெற்றுள்ளதும்  தெரியவந்திருக்கிறது. 

இது போன்று திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் குமரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர் பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்ச கணக்கில் நகை கடன் பெற்றுள்ளனர்.
 கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் தான் கடன் பெற முடியும். ஆனால், ஒரே நபர் 600க்கும் அதிகமான நகைக் கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருக்கிறார். பொதுவாக அடகு கடை காரர்கள் இதுபோன்ற செயல்கள் ஈடுபடக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 அடகு கடைக்காரர்கள் தங்களிடம் இருக்கும் நகையை பாதுகாப்பதற்காக கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. வட்டி குறைவு என்பதால் செயல்களில் ஈடுபட்டிருக்ககூடும்  என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூட்டுறவு சங்க வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
 இன்னும் ஓரிரு தினங்களில் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. குமரன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை  பொருத்தவரையில்  ஒரே ஆதார் எண்ணை வைத்து பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக நகை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஊழியர்கள் தவறால் கடன் பெற்றவர்களுக்கு  ஒரே ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கலாம் எனவே இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

Tags :

Share via