ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

by Editor / 25-10-2021 04:57:35pm
ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில்  தமிழகத்திலேயே மிக உயரமான 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை இதுதான் எனக் கூறப்படுகிறது.


ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரைவீதியில் வசிக்கும் அனுமன் உபாசகர் வாசுதேவ ஐயங்கார் சுவாமிகளின் 35 ஆண்டுகால தீவிர முயற்சியில் மேலூர் கொள்ளிடக்கரையில் 2 ஏக்கரில் சஞ்ஜீவன ஆஞ்சநேயர் கோயில் உருவாக்கப்பட்டது. பின்னர் இங்கு உயரமான ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு 120 டன் எடைகொண்ட ஒரே கல்லால் திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியை சேர்ந்த ஸ்தபதிகள் முத்துகிருஷ்ணன், இளையராஜா ஆகியோரால் கலை நயத்துடன் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையானது உருவாக்கப்பட்டது.


இதையடுத்து கடந்த செப். 13 ம் தேதி ஸ்ரீரங்கத்துக்கு இச்சிலை கொண்டுவரப்பட்ட பின்னர் இச்சிலையை நிறுவ 10 அடி உயர கான்கிரீட் பீடம் அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய கிரேன் மூலம் ஆஞ்சநேயர் சிலையானது பீடத்தில் தென் திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனர். வரும் பங்குனி மாதத்தில் இக்கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via