தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: மதுரை ஆதீனம் பேட்டி

தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களுக்கும் மதுரை ஆதீனத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. அவர்கள் மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த பெருமானுக்கு வெள்ளித்தேர் செய்து கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மருது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :