நிவாரணப் பணிகள் - முதல்வர் ஆலோசனை
மிக்ஜாம் புயல் பாதிப்பு, நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், நிவாரண பணிகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்களுக்கு புயல் பாதிப்பு நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை இந்த மாதத்துக்கான தவணை வரும் 15ஆம் தேதி வழங்கப்படவுள்ள நிலையில், அதனுடன் சேர்த்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags :