போலி முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி.. பெண் கைது
சென்னை பூங்கா நகரைச் சேர்ந்த பூஜா (39) என்பவர் ‘இந்தியா பாண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி இணையதளம் மற்றும் முதலீட்டு பத்திரங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி முதலீட்டு திட்டங்களை உருவாக்கி பலரிடம் பணம் பெற்று, ரூ.30 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :



















