பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் பணம்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக ஐஜேகேவினர் பணம் பதுக்கியதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் சோதனை செய்த போது கழிவறையில் ரூ.1 லட்சம் பணம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
Tags :