கூட்டணி முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் - ஈபிஎஸ்
சென்னையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை வரை அனைத்து மாவட்டச் செயலாளர்கள் சென்னையிலேயே இருக்க ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். முக்கியமான முடிவு இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :