மூதாட்டிகள் கொலைகள் அடுத்தடுத்து நகை பணத்திற்காக தொடர் கொலையா ? - பொதுமக்கள் அச்சம்.

by Editor / 12-07-2024 09:37:26am
மூதாட்டிகள் கொலைகள் அடுத்தடுத்து நகை பணத்திற்காக  தொடர் கொலையா ? - பொதுமக்கள் அச்சம்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள்  பணிபுரியும் 70வயது மதிக்கதக்க முதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு.பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் அடுத்தடுத்து 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் நகைக்கா மூதாட்டிகளை குறித்து கொலை சம்பவங்கள் நடைபெறுகிறதா என பொதுமக்கள் அச்சம்.கடந்த 8ஆம் தேதி மதுரை திருமங்கலம் வாகைக்குளம் மாயன்நகர் பகுதியில் மூதாட்டி காசம்மாள்(70) வயது 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மதுரை மேலூர் கச்சிராயன்பட்டியில் பாப்பு (60) என்ற மூதாட்டி கொலை, விரகனூர் பகுதியில் தோப்புக்குள் 56 வயதுடைய பெண் ஒருவர் கொலை என ஒரு வாரத்தில் 3 கொலைகள் நடைபெற்ற நிலையில் இன்று மேலும் ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

 

Tags : மதுரையில் தொடரும் மூதாட்டிகள் கொலைகள் அடுத்தடுத்து நகை பணத்திற்காக தொடர் கொலை ? -

Share via

More stories