272 கிலோ மீட்டர்கள் காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் முதல் முறையாக இணைக்கிறது .

டெல்லியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் சோதனை ஓட்டம் நேற்று மூணு மணி நேரத்தில் 150 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீ நகரை அடைந்தது.
சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கின்றது. டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் ஜம்முவை அடைந்த ரயில் நேற்று காலைஸ்ரீ நகருக்கு சோதனை ஓட்டத்தை தொடங்குவதற்கு இரவு நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் துறையில் கத்ரா ரயில் நிலையத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஸ்ரீநகர் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது .3 மணி நேரத்தில் 150 கிலோமீட்டர் அதிகமான தூரத்தை கடந்தது. மலைப்பாதைகள், வளைவுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகருக்கு இடையேயான பயணம் ஆறு முதல் 8 மணி நேரம் ஆகும். இருப்பினும் கத்ரா ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பு 272 கிலோ மீட்டர்கள் காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் முதல் முறையாக இணைக்கிறது இதன் மூலம் கணிசமான நேரம் மிச்சமாகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு கர்த்தராவிலிருந்து ஸ்ரீநகர் வரையிலான ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ..41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஷனாப் பாலம் ஆற்றில் இருந்து 1178 உயரத்தில் உலகின் மிகவும் உயரமான நிலப்பரப்பை கடந்து செல்ல கூடியதாக 100 கிலோ மீட்டருக்கு அதிகமான சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது . வேகமாக செல்லக்கூடிய வந்தே மாதரம் ரயில் 160 கிலோமீட்டர் இயக்காமல் 85 கிலோமீட்டர் வேகத்தை நிர்ணயித்து இயக்க இயக்க உள்ளனர். பாலம் மற்றும் சுரங்கப்பாதை என்பதால் இதுபோன்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :