சிறையில் தற்கொலை செய்துகொண்டதக்க கூறப்ப்டும் வாலிபரின் சாவில் மர்மம்-தந்தை சந்தேகம்.

by Staff / 15-10-2025 12:02:55am
சிறையில் தற்கொலை செய்துகொண்டதக்க கூறப்ப்டும் வாலிபரின் சாவில் மர்மம்-தந்தை சந்தேகம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசி தர்மத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி  மாடசாமி மகன் வினோத்குமார் 2019-ல் போஸ்கோ வழக்கில் ஜெயிலுக்கு சென்று விட்டு வாய்தாவுக்கு ஆஜராக  ஆகாததால்    நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வாரம் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் வினோத்குமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர் வழக்கு சம்பந்தமாக நேற்று தினம் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார் அப்பொழுது  அவர்களின் பெற்றோர்களிடம் உறவினர்களிடம் நல்ல முறையில் ‌பேசிவிட்டு சென்ற நிலையில் இன்று மாலை திடீரென பாளையங்கோட்டை சிறையில் வினோத்குமார் தற்கொலை செய்து இறந்து விட்டார் என போலீசார் தகவல் தெரிவித்தனர் இதனை கேட்டு அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கண்ணீருடன் கூறினார்.இறந்த வினோத்குமாருக்கு மனைவி முத்துலெட்சுமி குழந்தைகள் மதுசுதன், (5) மகேஷ் (2 மாதம்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சிறையில் தற்கொலை செய்துகொண்டதக்க கூறப்ப்டும் வாலிபரின் சாவில் மர்மம்-தந்தை சந்தேகம்.

Share via

More stories