காதல் திருமணம்... இளைஞருக்கு அரிவாள் வெட்டு

by Staff / 24-04-2023 02:47:29pm
காதல் திருமணம்... இளைஞருக்கு அரிவாள் வெட்டு

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கார்த்திக். இவர் பால்ராஜ் என்பவரின் மகள் ஜோதியை 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பால்ராஜிற்கு காதல் திருமணம் பிடிக்காததால் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் விக்னேஷ் கார்த்திக் வீட்டிற்கு சென்று பால்ராஜ் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via