ஏழை மாற்றுத்திறனாளியை சுமந்துசென்ற முன்னாள் ராணுவ வீரர்.
கடந்த 27.11.2022 அன்று இரவு சபரிமலை ஐய்யப்ப சுவாமியைக்காண பம்பை வழியில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் இருந்த நிலையில் பம்பையில் இருந்து மலை ஏறும் பொழுது நீலிமலை ஏற்றத்தில் கடந்த போது ஆந்திர மாநிலம் சித்தூர் சேர்ந்த மாற்று திறனாளி அல்லிராஜ் என்பவரை முன்னாள் ராணுவ வீரர் தற்போது ஐய்யப்பன் கோயில் பாதுகாவலர் குமார் என்பவர் தனது முதுகில் சுமந்து சென்றார்.கோயில் சன்னிதானம் வரை கொண்டு விட்டார்.அல்லிராஜ் என்பவரை தன்னூடைய முதுகில் தூக்கி சென்றவரை ஏராளமான ஐயப்பபக்தர்கள் பாராட்டினர்.மாற்றுத்திறனாளிகள் அய்யப்பனைக்காண டோலியில் போனால் தற்போது 6000-ரூபாய்கட்டணம். ஐயப்பனுக்கு சேவையாக தூக்கி சென்று போய் இறக்கி விட்ட தாக்க தெரிவிக்கிறார் முன்னாள் ராணுவ வீரர்.
Tags :