பஸ்க்காககாத்திருந்த தாய், மகள் ஆம்புலன்ஸ் மோதி பலி ஆம்புலன்சுக்கு தீ.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய், மகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து அங்கு வந்த சிலர் விபத்துக்கு காரணமான ஆம்புலன்சுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :


















