இருவர் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது

by Staff / 03-07-2024 12:07:23pm
இருவர் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுிகுளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா  (25), சுபாஷ் (23). இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டு  மாடு பிடித்தது தொடர்பான பிரச்சினையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லனை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் 8 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர் (23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த வாணிகருப்பு மனைவி மதுமதி (26), சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ் (23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி (21), யுவராஜ் (22), அருண்குமார் (30), ஒக்கூரைச் சேர்ந்த அபினேஷ் (22) ஆகிய 7 பேரை நேற்று (ஜுலை 2) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo