இன்று வெளியாகிறது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப்பட்டியல்.

by Editor / 14-03-2024 09:34:09am
இன்று வெளியாகிறது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப்பட்டியல்.

திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி உறுதியான நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக, திருச்சி, தேனி, ஆரணி தொகுதிக்கு பதிலாக நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலைக்குள் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : இன்று வெளியாகிறது

Share via