மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அச்சத்தில் மக்கள்.

by Editor / 14-03-2024 09:29:55am
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அச்சத்தில் மக்கள்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது மழை இல்லாத நிலை நீடித்து உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள வனப் பகுதியில் வசித்து வரும் வனவிலங்குகள் நீர் தேடியும் உணவு தேடி தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு தினங்களாக குண்டாறு நீர்த்தேக்க பகுதியான மோட்டை பகுதியில் உள்ள பூத்திரம், தென்கால் உள்ளிட்ட விவசாய நிலப் பகுதிகளுக்குள் புகுந்து ஒற்றை தந்தத்துடன் கூடிய ஒற்றை காட்டு யானை உலாவரத்  தொடங்கியுள்ளது. மேலும் அங்குள்ள தனியார் தோட்டங்களில் புகுந்து மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. நெற்பையிர்களையும் சேதப்படுத்தி வருகின்றது. இதன் தொடர்பாக வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டாலும் யானை இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குண்டாறு நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளது. மோட்டை பகுதியில் ஒற்றை யானை  உலா வருவதால் வனத்துறையினர் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தங்களது வயல் பகுதிகளுக்கோ தோட்டங்களுக்கோ செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து அந்தப் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில்  வீடுகளிலும் கட்டப்பட்டுள்ள நாய்களை தூக்கிச் சென்றுள்ளது. வனப்பகுதியில் உணவு இல்லாததையும் தொடர்ந்து குடிநீர் வசதி இல்லாததை தொடர்ந்து ஊருக்குள் வனவிலங்குகள் இரங்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 

Tags : மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அச்சத்தில் மக்கள்.

Share via