தமிழக அரசுஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய உறுதிப்படுத்தப்பட்டஓய்வூதிய திட்ட அரசாணை வெளியீடு.

by Admin / 11-01-2026 12:47:11am
தமிழக அரசுஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய உறுதிப்படுத்தப்பட்டஓய்வூதிய திட்ட அரசாணை வெளியீடு.

தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. எத்திட்டம் ஜனவரி 1 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாக நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% பங்களிப்பு செய்வார். மீதமுள்ள கூடுதல் நிதியை மாநில அரசே ஏற்கும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே ஓய்வூதிய காரர்களுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் ஓய்வூதியதாரர்கள் இறக்க நேரிட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு 60 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். பணியின் போது அல்லது ஓய்வு பெறும்போது ஊழியர் இறக்க நேரிட்டால் பனிக்காலத்தை பொறுத்து அதிகபட்சமாக 25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். ஜனவரி 1 2026க்கு பிறகு பணியில் சேர்ப்பவர்களுக்கு இத்தடம் கட்டாயமாகும் தற்போது பங்களிப்பு ஓய்வு திட்டத்தில் இருந்து 2026 ஜனவரி ஒன்றுக்கு பிறகு ஓய்வு பெறுபவர்கள் பழைய பங்களிப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் அல்லது இந்த புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் ஏதன் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய அறிவிப்புக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

 

Tags :

Share via