கணவனின் மடியில் பிரிந்த மனைவியின் உயிர் -குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்.

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராமநாதன் - தெய்வானை தம்பதியினர் தங்களது உறவினர்கள் 40 பேருடன் சேர்ந்து குற்றால மழைக்கால சீசனை அனுபவிப்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் ராமநாதன் - தெய்வானை தம்பதியினர் ஆனந்த குளியல் இட்ட நிலையில், ஆனந்த குளியல் இட்ட மகிழ்ச்சியில் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து தங்களது கடந்த கால வாழ்க்கை உணர்வுகளை அருவிக்கரை ஓரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ராமநாதன் மடியில் படுத்த தெய்வானை அப்படியே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமநாதன் அவரது மனைவியான தெய்வானையை பலமுறை தட்டிப் பார்த்தும், தூக்கிப் பார்த்தும் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாத நிலையில், அதிர்ச்சியடைந்த ராமநாதன் உடனடியாக சக உறவினர்களிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர்கள் வந்து தெய்வானையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த வயதான தம்பதியினர் தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து ஆனந்த மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது, கணவரின் மடியில் படுத்தபடி மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கணவன், மனைவி வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் எனவும், கணவன் மடியில் மனைவி உயிர் பிரிந்த சம்பவம் அவருக்கு கிடைத்த வரமே. மனைவியின் பிரிவு என்பது கொடும் வேதனை தான் என்றாலும் பாக்கியமாகவே இதை கருதுகின்றனர்.
Tags : The life of a wife who lost her husband in her lap - a tragedy that occurred at a tourist destination.