மாடல் அழகி சுட்டுக்கொலை.. முன்னாள் காதலனுக்கு தொடர்பு?

கொலம்பியா: குகுடா பகுதியை சேர்ந்த இளம் மாடல் அழகி மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் (22) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ம் தேதி மரியா மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். இதையடுத்து, படுகாயமடைந்த மரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இக்கொலையில், மரியாவின் முன்னாள் காதலனுக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த வாரம் குடும்ப வன்முறை வழக்கில் மரியாவிற்கு ரூ.6 லட்சம் வழங்க அவரது காதலனுக்கு கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :