நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி.... அதிமுக பலிகடா - முதல்வர் விமர்சனம்

by Staff / 03-09-2023 05:09:16pm
நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி.... அதிமுக பலிகடா - முதல்வர் விமர்சனம்

சென்னையில் இன்று திருமண நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ''ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பிரதமர் மோடி, நாட்டின் புதிய அதிபராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏதேனும் சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லை என்றால் அங்கு அடுத்த தேர்தல் வரும் வரை ஜனாதிபதி தேர்தலை அமல்படுத்துவார்கள். இப்படியே தொடர்ந்து , பிரதமர் என்பதை தாண்டி நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். ஆதரவு தெரிவித்த அதிமுக பலிகடா ஆக போகிறது'' என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo