ஜார்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இம்மாதம் 29 அல்லது 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சனிக்கிழமை அனுப்பப்பட்ட சம்மனில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்து விசாரணை நடத்துவார்கள். ராஞ்சியில் 7.16 ஏக்கர் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முதல்வர் சோரனுக்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது.
Tags :



















