காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் பலி

by Editor / 03-10-2021 11:35:58am
காஷ்மீரில்  பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் பலி

ஜம்மு - காஷ்மீரில் மூன்று இடங்களில் நேற்று (சனிக்கிழமை) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. மூன்றாவது தாக்குதல் அனந்த்நாக் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

இதில், மத்திய ரிசர்வ் காவல் படையின் பதுங்கு வழியில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக, அதில் யாரும் காயம் அடைவில்லை. மாலை 5:50 மணியளவில் காரா நகர் பகுதியில் மஜித் அகமது கோஜ்ரி என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

 

Tags :

Share via