கூகுள் மேப் காட்டிய வழி.. ஓடைக்குள் புகுந்த கார்

by Staff / 25-05-2024 02:31:01pm
கூகுள் மேப் காட்டிய வழி.. ஓடைக்குள் புகுந்த கார்

ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குழு கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். ஒரு பெண் உள்பட 4 பேரும் ஒரே காரில் ஒன்றாக வந்து கேரளாவின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் ஆலப்புழாவிற்கு செல்லும் வலி தெரியாததால் கூகுள் மேப்பில் வழி பார்த்து சென்றுள்ளனர். அப்போது குருபந்தரா என்ற இடத்தில் சாலையில் சென்ற நீரோடையில் சென்று மாட்டிக்கொண்டனர். நீரில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை உடனடியாக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர். எனினும், அவர்கள் வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories