கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றில் முதல்முறை மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.

by Editor / 06-03-2023 08:11:34pm
கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றில் முதல்முறை மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.

கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றில் முதல்முறை மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்.

மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டி தென்னகரயில்வேயின் பொதுமேலாளருக்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கோரிக்கை விடுத்து கடந்த 21.02.23 அன்று கடிதம் அனுப்பியிருந்தார்.இதனைத்தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக அவரது கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
 
மண்டைக்காடு பகவதி கோயில் திருவிழாவையொட்டி 2023 மார்ச் 05 முதல் 2023 மார்ச் 14 வரை ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பின்வரும் ரயில்கள் இரணியல் ரயில் நிலையத்தில் கூடுதல் தற்காலிக நிறுத்தத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

1. ரயில் எண். 19577 திருநெல்வேலி சந்திப்பு - ஜாம்நகர் இருவார விரைவு வண்டி 2023 மார்ச் 06, 07, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரணியலில்  (வந்தடையும்/ புறப்படும்: 09.39 மணி./09.40 மணி.) நிற்கும்.

2. ரயில் எண். 19578 ஜாம்நகர் - திருநெல்வேலி சந்திப்பு இருவார விரைவு வண்டி 2023 மார்ச் 06, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்இரணியலில் (15.36 மணி./15.37 மணி.) நிற்கும்.

3. ரயில் எண். 16335 காந்திதாம் சந்திப்பு - நாகர்கோவில் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் 12 மார்ச் 2023 அன்று இரணியலில்  (04.30 மணி./04.31 மணி.) நிற்கும்.

4. ரயில் எண். 16336 நாகர்கோவில் சந்திப்பு - காந்திதாம் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் 14 மார்ச், 2023 அன்று இரணியலில்  (15.04 மணி./15.05 மணி.) நிற்கும்.என தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via