.திமு.க கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கும்- முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

by Admin / 11-01-2026 02:04:04am
.திமு.க கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக  ஆட்சியை அமைக்கும்- முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர் கட்சி தொண்டர்களின் தீவிரமான தேர்தல் பணிகளை கண்டு தங்களின் கூட்டணி 200 இடங்களை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் 2026 தேர்தலில் வென்று ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சியை அமைக்கும் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதோடு தற்போது சுமார் 50 சதவீத தேர்தல் ஆயத்த பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் வேலை பார்த்தால் திமுக தொண்டர்களைப் போல வேலை பார்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உள்பட பல கட்சி சொல்கிறது என்றும் இன்னும் மீதமுள்ள 50 சதவீத வேலைகளை விரைந்து முடித்து 200 வெற்றியை இலக்கை அடைய வேண்டும் என்றும் இப்பொழுது உள்ள பணிகளைப் பார்க்கும்போது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். முன்னதாக மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

Tags :

Share via

More stories