சாலை விபத்து - தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி..

அதி வேகமாக வந்த கார் சாலையை கடக்கும் நபர் மீது மோதிய விபத்தில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை TSRTC எம்.டி சஜ்ஜனார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்த பதிவில், அவசர அவசரமாக முக்கிய சாலைகளை கடக்க வேண்டாம். கவனக்குறைவால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்காதீர்கள். இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த இந்த விபத்தில், வாலிபர் கார் மீது மோதி வானில் வீசப்பட்டார்” என பதிவிட்டுள்ளார்.
Tags :