வெள்ளத்தில் உடைந்த அணைகள்

by Staff / 12-09-2023 05:24:17pm
வெள்ளத்தில் உடைந்த அணைகள்

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் டேனியல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் உக்கிரத்தால் இரண்டு தடுப்பணைகள் உடைந்துள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அருகில் உள்ள கடலில் சிக்கினர். இந்த வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஏற்கனவே 2000 பேர் இறந்துள்ளனர். மேலும் 6,000 பேர் காணவில்லை என்று தகவல் வெளியானது. இந்த வெள்ளத்தில் சுமார் 3 பெரிய பாலங்களும்  அடித்துச் செல்லப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo