தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம் - முதல்வர் பேச்சு

by Staff / 18-11-2023 01:00:34pm
தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம் - முதல்வர் பேச்சு

என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று கூடியுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது. ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என கூறினார்.

 

Tags :

Share via
Logo