நேற்று காங்கிரசில் இணைந்த விஜயசாந்தி : இன்று பொறுப்பு

by Staff / 18-11-2023 01:08:39pm
நேற்று காங்கிரசில் இணைந்த விஜயசாந்தி : இன்று பொறுப்பு

பாஜகவில் இருந்தவர் நடிகை விஜயசாந்தி, இவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்பதற்காக சமீபத்தில், தான் இருந்த பாஜகவில் இருந்து விலகிய நேற்று மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரசாரம் மற்றும் திட்டக்குழுவுக்கு விஜயசாந்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இது நீண்ட நாட்களாக அரசியலில் இருப்பவர்கள் மத்தியில் சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via