சீமானை கூட்டணியில் இணைக்க தீவிரம் காட்டும் இபிஎஸ்

by Staff / 18-11-2023 01:12:48pm
சீமானை கூட்டணியில் இணைக்க தீவிரம் காட்டும் இபிஎஸ்

பாமக, தேமுதிக, தமமுக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டும் வகையில், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய இயக்கங்களை ஒருங்கிணைத்து, அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டுகிறாராம். சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி பலனளிக்காததால், அரசியல் சார்பற்ற சிலரை தூது அனுப்பி தங்கள் பக்கம் இழுக்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனித்தே போட்டி என சீமான் பல முறை கூறியிருக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo