கொரோனா பரவல் அதிகரிப்பு: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தயார் நிலை!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தயார் நிலை!
திருநெல்வேலி, ஜூன் 4: அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றபோதிலும், மருத்துவத் துறை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஒருசில இடங்களில் கொரோனா தாக்கம் இருந்து வருவதாகவும், அவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டைத் திறந்து தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
Tags : கொரோனா பரவல் அதிகரிப்பு: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தயார் நிலை!