இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி .

by Admin / 02-02-2025 09:47:06am
 இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி .

பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்துக்கள் குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பட உள்ளதாகவும் இது குறித்து அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும்.

ஆவண பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் அரசுக்கு ரூபாய் 238 கோடியே 15 லட்சம் ரூபாய் வருவாய் பதிவு துறையால் ஈட்டப்பட்டதாகவும் கடந்த 31 ஆம் தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 231 கோடியே 51 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியாண்டில் இரண்டாவது முறையாக அதிக வசூல் செய்து புதிய மைல் கொள்ளை பதிவுத்துறை எட்டியுள்ளதாகவும் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது.

 

 

Tags :

Share via
Logo