சேலம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா

by Staff / 21-04-2023 03:28:14pm
சேலம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளனர் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் 17 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via