தெலுங்கானா மாநிலத்தில் இறந்தவர் சடலத்துக்கு ரூ.8 லட்சம்  கேட்ட மருத்துவமனை உடைப்பு 

by Editor / 29-05-2021 05:18:41pm
தெலுங்கானா மாநிலத்தில் இறந்தவர் சடலத்துக்கு ரூ.8 லட்சம்  கேட்ட மருத்துவமனை உடைப்பு 



கொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைப்பதற்கு ரூபாய் 8 இலட்சம் கேட்ட தனியார் மருத்துவமனையை உறவினர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், வம்சி கிருஷ்ணா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்கான கட்டணமாக ரூபாய் 20 இலட்சம் கட்டணத்தை செலுத்திவிட்டு உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், கடந்த 7 நாட்களாக அலைந்து திரிந்து ரூபாய் 20 இலட்சம் கட்டணத்தில் ரூ.12 இலட்சத்தை செலுத்திவிட்ட நிலையில், எஞ்சிய ரூ.8 இலட்சம் செலுத்தினால் தான் உடலை தருவோம் என்று அடாவடியாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வம்சி கிருஷ்ணாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததால் வம்சி கிருஷ்ணா உயிரிழந்துவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை சூறையாடினர். இந்த விஷயம் தெலுங்கானா மாநில அரசுக்கு தகவல் தெரியவரவே, விதிகளை மீறி அதிக கட்டணத்தை வசூல் செய்ததாக கூறி மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via