10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அரசுப்பள்ளிகள் வாரியாக அரியலூர் மாவட்டம் முதலிடம்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார். 10ஆம் வகுப்பில் 93.80 சதவிகித மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,17,183 மாணவிகளும், 4,00,078 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அரசுப்பள்ளிகள் வாரியாக அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
Tags : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அரசுப்பள்ளிகள் வாரியாக அரியலூர் மாவட்டம் முதலிடம்.