ஸ்ரீவைகுண்டம்:தாமிரபரணி ஆற்று தண்ணீர் குடித்த 30 க்கும் மேற்பட்டோர்மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 16-05-2025 09:27:29am
 ஸ்ரீவைகுண்டம்:தாமிரபரணி ஆற்று தண்ணீர் குடித்த 30 க்கும் மேற்பட்டோர்மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் தம்பிராட்டி அம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களாக நடந்து நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அசைவ உணவு எடுத்து இன்று உண்டுள்ளனர். அதில் ஒரு சில பகுதிகளில் உள்ள தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அந்த பகுதி மக்கள் 30 க்கும் மேற்பட்டோர் அவசர அவசரமாக திருநெல்வேலி உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் உள்ளூரில் உள்ள சிறு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாகவே இந்த வல்லநாடு பகுதியில் தாமிரபரணி தண்ணீர் அசுத்தமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தாமிரபரணி தண்ணீர் நேரடியாக கிராமங்களில் உள்ள தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் விநியோகம் செய்யப்படுவதால் இதுபோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்

 

Tags : ஸ்ரீவைகுண்டம்:தாமிரபரணி ஆற்று தண்ணீர் குடித்த 30 க்கும் மேற்பட்டோர்மருத்துவமனையில் அனுமதி.

Share via