அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 3 சீட்..

by Staff / 08-02-2024 12:39:53pm
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 3 சீட்..

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், அதிமுக தனது தலைமையின் கீழ் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில், பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்டிபிஐ ஏற்கனவே உள்ள நிலையில், புரட்சி பாரதம் கட்சியும் கூட்டணியை தொடர முடிவு செய்துள்ளது. விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளை புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைமை எதிர்பார்க்கிறது. வரும் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தொகுதி எது என்பது பற்றி அறிவிக்கப்படும் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo