சமீபத்திய இணைய மோசடிகளில் இருந்து ஜாக்கிரதை- காவல்துறை

தமிழகத்தில் நாளுக்கு நாள் இணையத்தளத்தின் மூலமாக பல்வேறு மோசடிகளில் பணத்தை இளந்துவருகின்றனர்.இதனைத்தொடர்ந்து காவல்துறையும் பல்வேறுகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வைஏற்ப்டுத்தினாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டேதானிருக்கிறார்கள்.இந்த நிலையில் தற்போது புதுமையான முறையில் ஏமாற்றத்தை தொடங்கியுள்ளனர்.இது குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கள் செய்யபட்டுவருகின்றன.தற்போது நாட்டில் மொபைல் சிம் கார்டு 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து குடிமக்களுக்கும் தெரிவிக்கவே இது, இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம், சில சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் மொபைலுக்கு போன் செய்து உங்கள் சிம் கார்டை 4ஜியில் இருந்து 5ஜிக்கு அப்டேட் செய்யச் சொல்வார்கள். ஒரு OTP. OTP வழங்க வேண்டாம் எப்போதாவது அவர்கள் அனுப்பிய OTP எண்ணை அவர்களிடம் சொன்னால், அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கு அல்லது மித்ரா செயலியில் உள்ள அனைத்து பணத்தையும் அவர்களின் கணக்கிற்கு மாற்றுவார்கள், எனவே அந்நியன் யாராவது OTP கேட்டால் சொல்ல வேண்டாம்.என்றும் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags :