கேதார்நாத் கோயிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை

by Staff / 16-10-2022 02:19:21pm
கேதார்நாத் கோயிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருவதற்கு ரம்பாடா பகுதியிலிருந்து கருட்சட்டி பகுதிக்கு 5 கி.மீ. தூரம் மலையேறி வரவேண்டும். உயரமான செங்குத்தான பனிமலை என்பதால் இதற்கு 8 மணி நேரமாகும். சோன்பிரயாக் பகுதியிலிருந்து கேதார்நாத்துக்கு ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய வனவாழ்வு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் 8 மணி நேர பயணமானது 25 நிமிடமாகக் குறைந்துவிடும்.
 

 

Tags :

Share via

More stories

Logo