அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

by Staff / 02-11-2023 11:53:08am
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்து வரும் 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo