இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்

by Staff / 02-11-2023 11:56:26am
இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமோர் தீவுகளுக்கு அருகில் உள்ள குபாங்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குபாங் என்ற இடத்தில் 21 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டதால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது. திடீரென பூமி அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.

 

Tags :

Share via