குழந்தை பெற்றதும் எடை அதிகரிக்காமலிருக்க என்ன வழி….

by Admin / 24-07-2021 03:06:12pm
குழந்தை பெற்றதும் எடை அதிகரிக்காமலிருக்க என்ன வழி….

 

  திருமணம் முடிந்து கர்ப்பமுறும் காலம் வரை பெண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகஅழகாக வைத்திருக்க விரும்புவர்; வைத்திருப்பர்; தலைமுடி தொடங்கிபுருவம், கை நகம்,கால் நகம் வரை கவனம் செலுத்தி வருவர்தொடர்ந்து பராமரித்தும் பாதுகாத்தும், நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்க அக்கறை செலுத்துவர்…. உணவு பழக்கம் கூட குறைந்தபட்ச கலோரிகள் கிடைக்கக் கூடியதாகவே சாப்பிடுவர்தேவையற்று வயிற்றுக்குள் போட்டு அடைக்கிற பழக்கம் பெண்களுக்கு இருப்பதில்லைஎங்கே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் குண்டாகி விடுவோமோ என்கிற பயம் அவர்களோடே ஒட்டிக் கொண்டே இருக்கும்அதனால், அளவோடு சாப்பிடுவதிலும்

உடல் அழகை பேணுவதிலும் பெரும் விருப்பமுடையவராக இருப்பர்இதெல்லாம், திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறக்கும் வரைகுழந்தை பிறந்துவிட்டால், குழந்தை நலத்திற்காகவே ஊட்டச்சத்தான உணவுகளை உண்பதிலும் நேரக்கட்டுப்பாடின்றி கிடைக்கும் பொழுதெல்லாம் உண்பதுமானப் பழக்கம் உருவாகிவிடும்எந்த நேரத்தில் குழந்தை தூங்கும்எப்பொழுது கண் விழித்திருக்கும் என்பதெல்லாம் அறிந்து அதற்குத் தக காலத்தை அளவீடு செய்து உண்பதும் உறங்குவதுமான பழக்க வழக்கங்கள் மாறுபாடு காரணமாகத் தம் அழகு சார்ந்தஉடல்நலம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நிலையிலிருந்து மாறும் சூழல் இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறதுகுழந்தை சாப்பிடுவதற்காகச் சமைக்கப்பட்டஊட்டப்படும் உணவில் மிச்சம் வீணாகாமல் தானே சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுதல், பின் உடல் பருமனாகி எடை கூடி விடுகிறது.

அத்தோடு, பிள்ளையை மட்டுமே கவனிப்பதால் நேரம் கடந்த தூக்கம், வேலை செய்வதிலிருந்து விலக்கு என உருவாகும் சூழலால் உடல் எடை கூடி விடுகிறதுதன் அழகு என்பது மறந்து போய்விடுகிறது…. வெளியில் எங்கும் செல்லவில்லையே.. பின் எதற்கு புருவம், முடிகட் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வேறு தோன்றும்சிசேரியன் என்றால் சொல்லவே வேண்டாம்.. முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் வலி…. குனிந்து நிமிர முடியாமல் கஷ்டப்படுத்தும்உடல் பெருக்க.. ஓய்வும் உணவு உண்ணும் பழக்கமும் மெலிதான உடல்வாகை மாற்றிவிடும்கூடவே, தன் உடல் சார்ந்த கவனிப்புத் தன்மைமாறி.. தன் குழந்தை நலம் பேணுவதே சிறப்புடையது என்கிற எண்ணத்தை விளைவித்துவிடும்இதன் பொருட்டுத் தான் திருமணமாகிகுழந்தை பிறந்த பின்பு பெண்களின் உடல் எடை கூடுவதற்கு  காரணமாகின்றது.

           குழந்தை பிறப்பை காரணமாகச் சொல்லாமல், சிலர் உடற்பயிற்சி, யோகா, உணவுக்கட்டுபாடு, வேளை கெட்ட வேளையில் தூங்குவது போன்ற செயல்களைத் தவிர்த்து தம் உடலை பேணுவதில் கவனமுடன் செயல்படுகிறார்கள்அதனால், அவர்கள் முக அழகு, மெல்லிய உடல்வாகு, கவர்ச்சி தன்மை குறையாமல் இளமையாகவே இருக்குமாறு தன்னைக் கவனித்துக் கொள்கிறார்கள்குழந்தை பெற்றெடுத்தவுடன் தன் தேகநலனிலும அக்கறை எடுத்துக் கொள்வதின் மூலம்தான் ஓர் பெண் தன் இல்லற வாழ்வுவையும் இன்பமானதாக மாற்றிக் கொள்ள இயலும்அதனால், குழந்தை பிறந்துவிட்டது என்று சாக்குச் சொல்லாமல் முடிந்தளவு

  1. உடற்பயிற்சி செய்யுங்கள்
  2. மிச்ச பால், நெய் கலந்த பருப்பு சாதம், அரைத்த ஆப்பிள் செர்லெக், முட்டை, பால்சாதம், கீரை சாதம் போன்றவற்றை உண்பதை விலக்குங்கள்
  3. குழந்தை தூங்கும்பொழுதே உடன் தூங்குங்கள்..
  4. உடல் எடை கூடாத சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்
  5. மனதை இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்அது முகம் சுருங்குவதற்கும் முதுமை ரேகை படர்வதற்கும் வழி வகுக்கும்
  6. சிறிதாக உடல் பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்
  7. சூடான வெது வெதுப்பான நீரையே பருகுங்கள்

     

குழந்தை பெற்றதும் எடை அதிகரிக்காமலிருக்க என்ன வழி….
 

Tags :

Share via