இலங்கைக்கு கடத்தப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல்- நான்கு பேர் கைது

by Admin / 27-05-2024 10:38:42am
இலங்கைக்கு கடத்தப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல்-  நான்கு பேர் கைது

தூத்துக்குடி மாவட்டவேம்பார் அருகே உள்ள கடற்கரைப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கடத்திச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலையில் வேம்பார் கடல் பகுதியில் க்யூ போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வேம்பார் கடற்கரையில் இருந்து  இலங்கைக்கு கடத்துவதற்காக  IND TN 12 MO 2478 என்ற பதிவு எண் கொண்ட நிரோன் என்ற நாட்டுப் படகில் தலா 30 கிலோ எடை கொண்ட  84 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 520 கிலோ எடையுள்ள பீடி இலைகள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கியூ பிரிவு போலீஸ்  இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், க்யூ பரிவு போலீசார் ராமர், இருதயராஜ், பழனி, பாலமுருகன் ஆகியோர் படகை சுற்றி வளைத்து படகில் இருந்த பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி தாளமுத்து நகர் சிலுவைப் பட்டியைச் சேர்ந்த தேவ சகாயம் மகன் கெனிஷ்டன் (29), ராயப்பன் மகன் பொன்சிஸ் ராஜா (37), குமார் மகன் பனிமய கார்வின் (19), முருகேசன் மகன் மாதவன் (21) ஆகிய நான்கு பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு 50 லட்சம் என க்யூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கடத்தப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல்-  நான்கு பேர் கைது
 

Tags :

Share via