இலவசமாக பழுது நீக்கம் செய்து தரும்படி மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ.
மதுரை பாலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை தனது பைக்கை இலவசமாக பழுது நீக்கம் செய்து தரும்படி மெக்கானிக் சீனிவாசன் என்பவருக்கு அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய பாக்கி 8 ஆயிரத்துக்கு மேல் உள்ளதால் பழுது நீக்க முடியாது என சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சீனிவாசனை, அண்ணாதுரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் கஞ்சா வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவேன் என சீனிவாசனை மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஓசியில் டூ வீலரை சர்வீஸ் பார்த்து தராததால் கோபமடைந்த பாலமேடு எஸ்.ஐ அண்ணாதுரை மெக்கானிக்கை சரமாரியாக தாக்கிய சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது கஞ்சா வழக்கு போடுவேன் என்று எஸ்.ஐ மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மெக்கானிக் சீனிவாசன் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Tags : இலவசமாக பழுது நீக்கம் செய்து தரும்படி மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ.