விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாஜக கூட்டணியில் பாமக போட்டி

by Staff / 11-06-2024 04:24:07pm
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- பாஜக கூட்டணியில் பாமக போட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக பாமக போட்டியிட உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதால் தலைமையில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 13) பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு பின் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via