பா.ஜ.கட்சி கூட்டணி தொடர்ந்து 194 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. பா.ஜ.கட்சி கூட்டணி தொடர்ந்து 194 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதில் பாரதிய ஜனதா 87 நிதீஷ் குமார் கட்சி 79 இடங்களிலும் ராம் விலாஸ் பஸ் வான் கட்சி 21 இடங்களிலும் முன்னிலை பதித்து மொத்தம் 194 இடங்களை கைவசப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.. இதில் காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களிலும் ஆர். ஜே. .டி 31 இடங்களிலும் சி..பி..ஐ. எட்டு இடங்களிலும் முன்னிலை வகுத்து வருகின்றது.. கருத்து கணிப்பை மீறி பாரதிய ஜனதா அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது . காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவு அடைந்ததோடு ஆர். ஜே. டி தலைவர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவிலே சென்று கொண்டிருக்கின்றார்.. தம் சொந்த மாநிலத்தில் பலமுறை ஆட்சி அமைத்த லல்லு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா கட்சி கடும் தடுமாற்றத்தோடு இந்த தேர்தலை எதிர்கொண்டு இருக்கின்றது.. தாங்கள் வெற்றி பெறுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூற்று முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்தி வருகிறது..
Tags :


















