மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். நேரில் சந்தித்து ஆறுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எகேஆர் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 9 நபர்கள் உயிர் இழந்துள்ளனர் . போதை பொருள்கள் முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவு உதவி ஆய்வாளர் தீபன் மது விலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் பிரியா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஏற்கனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















