கனமழையால் சேதமடைந்த .163-பணிகளில் 37-பணிகள்முடிவடைந்துள்ளது-அமைச்சர் எ.வ.வேலு.

by Editor / 04-09-2024 06:23:19pm
 கனமழையால் சேதமடைந்த .163-பணிகளில் 37-பணிகள்முடிவடைந்துள்ளது-அமைச்சர் எ.வ.வேலு.

தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பாலம் அமைக்கும் பணி,  தூத்துக்குடி 3ம் கேட் சர்வீஸ் சாலை, உள்ளிட்ட பணிகளை பாரவியிட்டு கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சாலைகளை சீரமைக்கப்பட்ட பணிகள் புகைப்படங்களையம் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் 13-நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில்தங்கி இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து 163-பணிகள் மொத்தம் முடிக்க முடிவு  செய்தோம் அதில் 37-பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளது மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்.

கடந்த ஆட்சியில் சாலைகள் அமைக்க டெண்டர் விட்டார்கள் ஆனால் பணிகள் நடைபெறவில்லை.
எங்கள் ஆட்சியில் சாலையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் முதலில் நிலம் கையகபடுத்தி பின்னர்தான் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்கின்றோம்.தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அந்தோணியார் புரம் அருகே கடந்த ஆண்டு பெய்த  கன மழை காரணமாக சாலை செய்தமடைந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளது ஆகையினால் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலையை சீரமைக்க ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

 

Tags :  கனமழையால் சேதமடைந்த .163-பணிகளில் 37-பணிகள்முடிவடைந்துள்ளது-அமைச்சர் எ.வ.வேலு.

Share via