இன்று குழந்தைகள் தின விழா...
இன்று குழந்தைகள் தின விழா. குழந்தைகளை தெய்வங்களாக பார்த்த சமூகம். குழந்தைகள் மேல் அளவற்ற அன்பு கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை ..அவரை கௌரவிக்கும் விதமாக குழந்தைகள் தின விழாவை இந்திய சமூகம் அரை நூற்றாண்டுக்கு மேலாக கொண்டாடி வருகின்றது. .அந்த நிலையில், இன்று குழந்தைகள் தினம் பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நினைவுகளில் பின்னோக்கி செல்களில், குழந்தைகள் தினமும் சுதந்திர தினமும் குடியரசு தினமும் எப்பொழுது வரும் .அந்த ஆரஞ்சு வில்லைகள் எப்பொழுது தருவார்கள் என்ற ஏக்கத்தோடு..... வந்திருந்த சிறப்பு விருந்தினர் பேச்சை கேட்க கூட அறிவு பக்குவம் பெறாத வயதில்...இனிப்பின் சுவை தந்த ஆசையில்... கண்களில் ஏக்கம் மிதக்க வாழ்ந்த... அந்தப் பழைய நினைவுகள் பசுமையாக ஒவ்வொருவர் நெஞ்சுக்குள்ளும் வந்து போகும் நேரம் இது..
Tags :


















