செப்.17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

by Staff / 13-09-2023 03:55:46pm
செப்.17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக செப். 17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். வரும் 18ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான அழைப்பிதழ் அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via